`மின் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம்!’ – காட்டுமன்னார் கோவில் அருகே மின்வாரிய ஊழியர் கைது

26502 101

கடலூர் மாவட்டம் லால்பேட்டை தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின்சாரத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் வணிக உதவியாளர் தமிழினியனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

வீராணம் ஏரிக்கரையில் உள்ள கொள்ளுமேட்டை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர், தனது பெட்டிக் கடைக்கு மின் இணைப்பு வேண்டி, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் லால்பேட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். சுமார் ஒரு ஆண்டாக மின் இணைப்பு வேண்டி அலைந்து வந்துள்ளார். மின் இணைப்புக் கொடுக்க அதிகாரிகள் 5,000 ரூபாய் லஞ்சம்கேட்பதாகத் தெரிய வந்தது. இதுகுறித்து அவர், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குப் புகார் அளித்தார்.

Leave a comment