போதை பொருளை கட்டுப்படுத்த முப்படைகளின் ஒத்துழைப்பு!

212 0

போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

நாட்டின் வெகுவாக அதிகரித்துவரும் போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் உள்ளிட்ட இலங்கை பொலிஸார் மூலம் பாரிய பணி நிறைவேற்றப்படுகிறது.

அத்தோடு தேவையான சந்தர்ப்பங்களில் அதற்காக பொலிஸ் விசேட அதிரடி படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்பும் பெறப்படுகின்றது. போதை பொருள் நடவடிக்கைகளை மிகவும் வெற்றிகரமாக முறியடிப்பதற்கு முப்படையின் பங்களிப்பை ஆக கூடுதலாக பெற்றுக்கொள்வதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக போதைப்பொருள் நடவடிககையை கட்டுப்படுத்தும் பணியை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முப்படையினருக்கு சட்டமா அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்ட சில அதிகாரங்களை வழங்கும் வகையில் போதை பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விசேட ஒழுங்குவிதிகள் தொடர்பான திருத்த சட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ மற்றும் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் இணைந்து நேற்றைய தினம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

Leave a comment