தகுதி நீக்க வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? தங்க தமிழ்செல்வன் விளக்கம்

2 0

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? என்பதற்கு தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டசபை சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். அதில், சபாநாயகரின் உத்தரவை சரி என்று தலைமை நீதிபதியும், தவறு என்று நீதிபதி எம்.சுந்தரும் கூறியிருந்தனர்.

இதையடுத்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், வழக்கில் ஒரு மனுதாரருமான தங்க தமிழ்செல்வன், தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சனம் செய்து, ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்தார்.

இதையடுத்து அவர் மீது, ஐகோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பெண் வக்கீல் ஸ்ரீமதி என்பவர் தாக்கல் செய்தார். இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இந்த வழக்கை பரிசீலித்துவிட்டு, தங்க தமிழ்செல்வனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்படி, தங்க தமிழ்செல்வன் நேற்று மாலையில் வக்கீல்கள் தமிழ்மணி, டி.மோகன் ஆகியோருடன் ஆஜரானார். அப்போது தலைமை நீதிபதி குறித்து தெரிவித்த விமர்சனத்துக்கு, நிபந்தனையற்ற மன்னிப்பை அவர் கோரினார்.

இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், நிபந்தனையற்ற மன்னிப்பை எல்லாம் ஐகோர்ட்டில் தான் கேட்கவேண்டும் என்று கருத்து கூறினார். இதையடுத்து, கோர்ட்டு அவமதிப்பு புகாருக்கு விளக்கம் அளிக்க தங்க தமிழ்செல்வன் தரப்பில் 6 வார காலஅவகாசம் கேட்கப்பட்டது. இந்த கோரிக்கையை அட்வகேட் ஜெனரல் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து ஐகோர்ட்டை விட்டு வெளியில் வந்த தங்க தமிழ்செல்வன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கு குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார். அதன்படி இன்று (நேற்று) ஆஜரானேன். பின்னர் இந்த வழக்கிற்கு விளக்கம் அளிக்க காலஅவகாசம் கேட்டதால், ஆகஸ்டு 29-ந்தேதி நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார்.

தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவேன் என்று முன்பு கூறினேன். தற்போது வழக்கை வாபஸ் பெறவேண்டிய சூழ்நிலை இல்லை. இந்த வழக்கை தற்போது விசாரிக்கும் 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் மீது நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு விரைவாக முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், வழக்கை வாபஸ் பெறவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

Posted by - June 28, 2017 0
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழ்வரையும் விடுதலை செய். 26 ஆண்டுகளாக நிரபராதிகள் சிறையில்! ஜெயின் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட…

சீமானை கைது செய்ய போலீஸ் தீவிரம்: முன்ஜாமீன் கேட்டு மனு

Posted by - May 21, 2018 0
மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதிய சம்பவத்தில் சீமானை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தன்னை கைது செய்யாமல் இருக்க சீமான் தரப்பில் முன்ஜாமீன்…

மக்கள் கொடுத்த ஆதரவையெல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார்

Posted by - March 20, 2017 0
மக்கள் கொடுத்த ஆதரவை எல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார் என முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

போயஸ் கார்டன் வீடு எங்களுக்கே சொந்தம்: ஜெ.தீபா அறிக்கை

Posted by - May 26, 2017 0
என் அத்தைக்கு சொந்தமான, அனைத்து பூர்வீக சொத்துக்களை முறைப்படி பராமரிக்கும் உரிமை எனக்கும், சகோதரர் தீபக்குக்கும் மட்டும் உள்ளது என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொது…

போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

Posted by - June 25, 2018 0
புதுச்சேரி மற்றும் கோவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார்கள் உள்பட பொருட்கள்…

Leave a comment

Your email address will not be published.