16 பேர் கொண்ட குழு தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விரைவில் நீக்கம்- ஸ்ரீ ல.சு.க.

258 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரும் ஒத்துழைப்பு வழங்க வில்லையாயின், தொகுதி அமைப்பாளர் பதவியில் அவர்களை தொடர்ந்தும் வைத்திருப்பதா? இல்லையா? என விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாயர் ரோஹண லக்ஷ்மன் பியதாச அறிவித்துள்ளார்.

கட்சியை பலவீனப்படுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

16 பேர் கொண்ட குழுவிலுள்ள தயாசிறி ஜயசேகரவும், ஏனைய சிலரும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment