மோட்டார் வாகனங்கள் தொடர்பிலான 33 குற்றச்சாட்டுக்களுக்கு ஏற்கனவே அறவிடப்பட்டு வந்த தண்டப் பணம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவில் விமான சேவை மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு ஏற்ப இந்த தண்டப் பண அதிகரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனங்கள் தொடர்பிலான 33 குற்றச்சாட்டுக்களுக்குரிய தண்டப் பணம் நூற்றுக்கு 30 வீதம் தொடக்கம் 50 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

