மேற்பார்வை உறுப்பினர்களாக 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமனம்!

257 0

பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் அமைச்சின் மேற்பார்வை உறுப்பினர்களாக புதிதாக நியமிக்கபட்டுள்ளனர்.

சமூக சேமநலம் மற்றும் ஆரம்ப கைத்தொழில்துறை அமைச்சுக்காக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சின் மேற்பார்வை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட திருமதி டொக்டர் துசித்தா விஜயமான , திருமதி ரோகினி விஜயரத்ன, பந்துலால் பண்டாரிகொட மற்றும் சந்திம கமகே ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நியமனகடிதங்களை சமூக சேமநலம் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே வழங்கினார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இந்த நியமனம் தமது அமைச்சிற்கு வலுவூட்டுவதாக தெரிவித்தார்.

Leave a comment