கூடிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

1607 0

12 தசம் ஐந்து கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக ஐந்து கிலோ கிராம் மற்றம் இரண்டு தசம் 3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளன.

ஐந்து கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயுவின் விலை 55 ரூபாவினாலும் இரண்டு தசம் 3 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரும் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அதிக விலைக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை ஈடுபட்டுள்ளது.

இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதுடன் குற்றமிழைத்தவர் எனக் காணப்பட்டால் 5 ஆயிரத்திற்கும் 10 ஆயிரத்திற்கும் இடையில் தண்டப் பணம் விதிக்கப்படும். அத்துடன் சிறைத்தண்டனை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படக் கூடும்.

ஏதாவது ஒரு நிறுவனம் தவறிழைக்குமாயின் பத்தாயிரம் ரூபாவிற்கும் ஒரு லட்சம் ரூபாவிற்கும் இடையில் தண்டப் பணம் விதிக்கப்படுவதுடன் இரண்டு வருட கால சிறைத்தண்டனை அல்லது இந்த இரு தண்டனைகளும் விதிக்கப்படும்.

கூடுதலான விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தகர் தொடர்பிலான தகவல்களை தொலைபேசி மூலம் வழங்க அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் – 1977, 0117 75 51 81.

Leave a comment