மெனிங் சந்தையிலுள்ள பழங்களில் இரசாயனப் பொருட்கள் பயன்பாடு இல்லை- உபசேன

250 0

கொழும்பு மெனிங் சந்தையிலுள்ள பழ விற்பனை நிலையங்களில் மனித உடலுக்கு ஆபத்தான எந்தவொரு இரசாயனப் பொருட்களையும் பழங்களுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் புகை அடித்து பழங்களைக் கனிய வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

இரசாயனப் பொருட்கள் பாவனையினால் மனித உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம். உபசேன தெரிவித்துள்ளார்.

Leave a comment