காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

269 0

பொலன்னறுவை, கல்லேல்ல பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்லேல்ல வனப் பிரதேசத்திற்கு மாடுகளை பார்க்கச் சென்ற ஒருவரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்துருவெல, கல்லேல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை, வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment