புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் இரண்டு இன்று (07) காலை தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு நகர சபை தீயணைப்புப் பிரிவு தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தற்பொழுது தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் இழப்புக்கள் என்பன இதுவரையில் அறியப்படாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

