பழைய தேர்தல் முறைமை சிறந்தது- ஸ்ரீ ல.மு.கா.

484 0

புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது பாரியமோசடிகள் இடம்பெற்றதாகவும்,  விருப்பு வாக்கு முறையை விட மோசடி நிறைந்த சூழலை புதிய தேர்தல் முறைமை உருவாக்கியிருந்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள் உள்ள இடத்தில் மீண்டும், மீண்டும் நேரத்தை வீணடிக்காது புதிய தேர்தல் முறைமையை ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையிலேயே தேர்தலை நடத்துமாறும் அமைச்சர் நேற்று (06) பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

பழைய முறையின் ஊடாக எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி இழைக்கப்படாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment