விஜயகலாவுக்கு எதிராக அத்தனை நடவடிக்கையையும் எடுப்போம்- மஹிந்த

673 30

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரன் மேற்கொண்ட அறிவிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுபோன்றவற்றுக்கு நடவடிக்கை எடுக்கும் போது ஒழுங்குமுறையொன்று காணப்படுவதாகவும் எடுத்த எடுப்பில் எதுவும் முன்னெடுக்க முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அறிவிப்பை விடுக்கும் போது நான் வெளிநாட்டில் இருந்தேன். இராஜாங்க அமைச்சரின் இந்த அறிவிப்பை அரசாங்கம் உட்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய அமைச்சில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment