விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் தங்கியிருந்த சிறைச்சாலை வார்டிலிருந்து 3கையடக்க தொலைபேசிகள், 5 சிம் காட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகள் சிறப்பு விசாரணைக்குழுவினரால் இவை மீட்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி சட்டத்தரனி யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி விவகாரத்துடன் தொடர்புடைய குறித்த இருவரும், இன்றைய தினம் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.