பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த பிணை மீள்பரிசீலனை மனு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (04) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி சிரான் குணரத்ன ஆகியோர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி மனுதாரர்கள் சார்பில் விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

