நெருப்பு மனிதர்கள்!

5529 0

“சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.” என தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனையின் உண்மையினை விடுதலைப்புலிகளின் வாழ்கையில் இருந்து காணக்கூடியதாக உள்ளது.

சாதாரண மனிதர்கள் போராளிகளாகி பல்வேறு தியாகங்களை செய்தார்கள். சத்தியத்திற்காக சாவை தழுவி மாவீரர்கள் ஆனார்கள். இந்த போரளிகளில் இருந்து உருவான சிறப்பு படையணியே கரும்புலிகள் . தேசியத் தலைவர் அவர்களின் மொழியில் சொல்வதானால் கரும்புலிகள் தெய்வீகப்பிறவிகள்.

“மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.” என்றார் தேசியத் தலைவர்.

ஈழத் தமிழினத்தின் விடுதலையை விரைவாக வென்றெடுக்கவேண்டும் என்பதற்காக போராட்டத்தின் தடைக்கற்களை அகற்ற கரும்புலிகளின் காலம் கப்டன் மில்லருடன் ஆரம்பமாகியது.

தரைக் கரும்புலிகள்
கடற் கரும்புலிகள்
வான் கரும்புலிகள்
மறைமுகக் கரும்புலிகள்

சிறப்பு படையணிகள் என சீறிப்பாய்ந்தன “இது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்“ என்றார் தலைவர் .

தரை,கடல், வான் கரும்புலிகள் தம் தலைவர் அவர்களை நேரடியாக சந்தித்து இறுதி விடைபெற்று எதிரியை இல்லாதொழிக்க வெடிமருந்தை தம்முடன் அணைத்து மாவீரர் பட்டியலில் தம்மை இணைந்துக்கொள்வார்கள்.

“கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போரட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.” என்றார் எம் இனத்தின் தலைவர்.

இவர்களின் வரிசையில் எதிரியின் கோட்டைக்குள் சாதாரண மனிதர்களாக வாழ்ந்து தமிழினத்தை அழிக்க மூளையாக செயற்படும் எதிரிகள், துரோகிகளை தம்முடனுடன் வெடிமருந்தை கட்டி இலக்குகளை அழிக்கும் இலட்சிய நெருப்புகளான மறைமுகக் கரும்புலிகள் தலைவன் (அண்ணனின்) முகத்தை காணாது தமது முகத்தை மறைத்து இலக்கை அழித்து இரகசிமாய் காற்றோடு கலந்து விடுவார்கள்.

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை – சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை – கரும்
புலிகளின் கல்லறை வெளியில் இல்லை…

என்றார் கவிஞர் புதுவை இரத்தினதுரை.

இனத்தின் விடிவுக்காய் கரும்புலிகள் தம்மை தாமே ஆகுதி ஆக்கிக்கொண்டா்கள்.

இன்று உலகை அச்சுறுத்தும் தற்கொலை தாக்குதல்கள் பாக்கிஸ்தான், ஆஃப்கன், நைஜீரியா… மற்றும் சிரியா போன்ற நாடுகளில் மதத்தின் பெயரால் மக்களை கொல்லும் ஒரு பயங்கரவாத நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் உயிராயுதங்களை உலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தற்கொலை தாக்குதலுக்கு ஒப்பிடுவதே இந்த உலகம் தமிழ் இனத்திற்கு தந்தது விட்ட சாபக் கேடு.

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. என்பதே கரும்புலிகள் தினத்தில் ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

Leave a comment