வெலிகந்த சூரியவெவ பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டுப் பகுதியில் வைத்து குறித்த நபர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகரை, கதிரவௌி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

