தொழிற்சங்கங்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூட முடியாதென்றும், எதிர்வரும் 4ஆம் திகதி நாடுபூராகவும் உள்ள சகல பாடசாலைகளும் வழமைப்போல் திறக்கப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
4ஆம் திகதி பாடசாலை மூடப்படுமென வெளிவரும் தகவல்களால் 42 இலட்ச மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனிநபர்களின் அரசியல் தேவைகளுக்காக கல்வியுடன் விளையாடுவதை தவிர்க்குமாறு சகலரிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

