மஹிந்தவை அடுத்த தேர்தலுக்கு முன்னர் பிரதமராக நியமிப்பதற்கு முயற்சி!

200 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அடுத்த தேர்தலுக்கு முன்னர் பிரதமராக நியமிப்பதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுக்கப்போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, நேற்று (01) தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர் கூறியதாவது,

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணியில் உள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கையை, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தின் போது 80ஆக அதிகரிக்க எண்ணியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன் மூலம், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை குறைக்க எண்ணியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிக்கும் வேட்பாளரை தாமும் ஆதரிக்கப் போவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment