வாகன விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி

334 0

மட்டக்களப்பு வெல்லாவெளி குளுமுந்தன் பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும்; கென்டர் வாகனமும் நேருக்கு நேர்; மோதி விபத்துக்குள்ளானதில்; முச்சக்கரவண்டியில் பயணித்த ஒன்றரை வயது ஆண்குழந்தை ஒன்று  உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெற்றுள்ள நிலையில் கென்டர் வாகன சாரதி கைது செயயப்பட்டுள்ளதாக  வெல்லாவெளி  பொலிசார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி களுமுந்தன் பிரதேசத்தைச் சேர்ந்த ஓன்றரை வயதுடைய சதீஸ்வரன் தஷ;சன் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது

குறித்த  முச்சக்கரவண்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு களுமுந்தன் நோக்கி  பயணித்த போது நெல்மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அம்பளாந்துறையை நோக்கி சென்ற கென்டர் ரக வாகனமும் களுமுந்தன் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக் குள்ளானது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த ஒன்றரைவயது சிறுவன் உயிரிழந்ததுடன் முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழந்த சிறுவனின் தாயாரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதில் உயரிழந்த சிறுவனின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கென்டர் வாகனத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a comment