சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை!

438 0

வட மாகாணத்தில் நிலவும் வன்முறைச் சம்பவங்களையும் போதைப் பொருள் பாவனையையும் நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சரினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கில் அண்மைக்காலமாக போதைப் பொருள் பாவனையும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றது .எனவே கடமையில் இருக்கும் சிரேஷ்ட உப காவல்துறை அதிபர் அல்லது இழைப்பாரிய சிரேஷ்ட உப காவல்துறை அதிபரின் தலைமையில் வட மாகாண சபை அலுவலர்களை உள்ளடக்கி குறித்த வன்முறை, போதைப் பொருள் விநியோகம் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment