எரிபொருள் பெற்றுக் கொண்டதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனமும், இலங்கை மின்சார சபையும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 6700 கோடி ரூபா கடனாக வழங்கப்பட வேண்டியுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை முன்னெடுத்துச் செல்வது சிரமமாக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

