மாடியிலிருந்து வீழ்ந்து 2 பேர் மரணம்

379 0

கொழும்பு அநாகரிக தர்மபால மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்கு மாடிக் கட்டடத்தின் 4 ஆவது மாடியில், வேலை செய்து கொண்டிருந்த  2 பேர் இன்று (29) அதிலிருந்து விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பதுளை மற்றும் பிபிலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 45 வயது மற்றும் 39 வயதுடைய 2 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெஹிவளைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment