06 வகையான பயிர்களுக்கு இலவச காப்புறுதி!

222 0

இந்த ஆண்டு முதல் ஆறு வகையான பயிர் செய்கைக்கு எவ்வித பங்களிப்பு கட்டணமும் இன்றி இலவசமாக விவசாயக் காப்புறுதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதன்படி நெல், பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு, சோளம், சோயா அவரை மற்றும் பச்சை மிளகாய் ஆகிய பயிர்களுக்கு இவ்வாறு இலவசமாக காப்புறுதி வழங்கப்படும்.

ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதமும், ஒரு ஹெக்டெயர் நிலப்பரப்பிற்கு ஒரு லட்சம் ரூபா வீதமும் காப்புறுதி வழங்கப்படும்.

இலங்கை விவசாய மற்றும் கமநல சபையின் ஊடாக இந்தக் காப்புறுதிகள் வழங்கப்படும்.

எனவே, இந்தப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு தமது உற்பத்திகளுக்கான கொடுப்பனவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Leave a comment