கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்

296 0

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர்கள் நடிகர் பிரகாஷ் ராஜை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுப் பிரிவு (சிஐடி) அதிகாரிகள் இந்து யுவசேனா அமைப்பின் செயலாளர் கே.டி.நவீன் குமார், ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்த பரசுராம் வாக்மோர், அனில் காலே உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ள‌னர். விசாரணையில் கவுரி லங்கேஷ் கொலையில் தங்களுக்கு தொடர்பு இருப்பதை இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளன‌ர்.

இந்நிலையில் பாஜகவை விமர்சிக்கும் எழுத்தாளர் கிரீஷ் கர்னாட், பேராசிரியர் கே.எஸ்.பகவான் மற்றும் இந்துத்துவ அமைப்புகள், பிரதமர் மோடியை விமர்சிக்கும் நடிகரும், கவுரி லங்கேஷின் நண்பருமான‌ பிரகாஷ் ராஜை கொல்ல திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து‌ பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் கூறும்போது, “கோழைகளே, இவ்வளவு வெறுப்பு அரசியலை செய்துவிட்டு நீங்கள் தப்பிக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a comment