சிரியாவில் நிவாரணப் பணிகள்

341 0

800x480_image49832472சிரியாவில் தாக்குதல்களால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளுக்கான நிவாரண விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அமெரிக்கா – ரஷ்ய இணக்கப்பாட்டின் படி அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள யுத்தத் தவிர்ப்பு நேற்று முழுதினமும் வன்முறைகள் இன்றி அமுலாக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்றையதினம் முதல் பொது மக்களுக்கான நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கிழக்கு அலெப்போ பிராந்தியத்துக்கான முக்கிய நுழைவு பகுதிகளில் ரஷ்யாவின் படையினர் மோதல் தவிர்ப்பினை கண்காணித்து வருகின்றனர்.

எதிர்கட்சிப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதியில் சுமார் 2 லட்சத்த்து 50 ஆயிரம் பொது மக்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, சிரிய அரசாங்கத்தின் அனுமதிக்கு காத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.