சாட்சியாளர் பாதுகாப்பு கிளை காவற்துறை நிலையங்களில்

338 0

wijeyadasa-rajapaksaபாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பதற்கான அதிகார சபையின் கிளைகள் காவற்துறை நிலையங்களில் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதிகளில் இந்த கிளைகள் காவற்துறை நிலையங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

காவற்துறையினர் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக சிக்கலுக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சில காவற்துறை அதிகாரிகளால் அந்த திணைக்களத்துக்கே அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கான கிளைகள் காவற்துறை நிலையங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் சாட்சியாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், மோசடிக்கு உள்ளாவதும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சட்டத்தை உரிய வகையில் நிலைநாட்டுவதும் இந்த கிளை உருவாக்கததின் முக்கிய நோக்கமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சகல காவற்துறை நிலையங்களிலும், அடிப்படை உரிமைகள் குறித்த பட்டியல் காட்சிப் படுத்தப்பட வேண்டும் என்று, புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கான அடிப்படை உரிமைகள் குறித்த உபகுழுவின் உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமாரினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.