40 ஆயிரம் வீடுகளுக்குரிய ஒப்பந்தத்தை இந்தியாவிடம் வழங்க கூட்டமைப்பு விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் கோரிக்கை

362 0

வடக்கு– கிழக்கு மாகா­ணத்­தில் அமைக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள 40ஆயி­ரம் வீடு­க­ளுக்­கு­ரிய ஒப்­பந்­தத்தை சீன நிறு­வ னத்­துக்கு வழங்­க ­வேண்­டாம். அந்த ஒப்­பந்­தத்தை இந்­தி­யா­வுக்கு வழங்­குங்­கள் என பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.

கூட்­ட­மைப்­பின் கோரிக்­கையை சாத­க­மாக ஆராய்வ­தாக பிரதமர் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன், சி.சிறீ­த­ரன், யாழ்.மாந­கர சபை முதல்­வர் இ.ஆனோல்ட், வலி.வடக்கு பிர­தேச சபைத் தவி­சா­ளர் சோ.சுகிர்­தன் ஆகி­யோர், பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்­கீம், ரிசாட் பதி­யு­தீன், டி.எம்.சுவா­மி­நா­தன் ஆகி­யோ­ரும், உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்சு, மீள்­கு­டி­யேற்ற அமைச்சு, வன­ஜீ­வ­ரா­சி­கள் அமைச்சு ஆகி­ய­வற்­றின் செய­லர்­க­ளும், முப்­ப­டை­யி­ன­ரும், வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்த மாவட்­டங்­க­ளின் செய­லர்­க­ளும் வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்­ட­னர்.

வடக்கு, கிழக்­கில் வீடு­களை அமைக்­கும் பணி சீன நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டமை குறித்து இந்­தியா கவலை வெளி­யிட்­டி­ருந்­தது. இந்த ஒப்­பந்­தம் சீன நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டது சரியே என்று அமைச்­சர் சுவா­மி­நா­தன் தெரி­வித்­தி­ருந்­தார்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், இந்த விட­யம் பிரதமரின் கவ­னத்­துக்கு இந்தக் கூட்டத்தில் கொண்டு செல்­லப்­பட்­டது.

சீனா­வுக்கு வழங்­கப்­பட்ட ஒப்­பந்­தத்தை இல்­லா­மல் செய்து, 12 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யில் இந்த வீடு­களை அமைத்­துத்­தர இந்­தி­யா­வி­டம் கோரிக்கை விடுக்­கப்­ப­ட­வேண்­டும். இந்­திய அரசு கோரிக்­கையை ஏற்­றுக் கொண்­டால், அவர்­கள் ஊடாக இந்­தத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும் என்று கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் பிரதமர் ரணி­லி­டம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இது தொடர்பில உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு அமைச்­ச­ர­வைக்கு மீண்­டும் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் சமர்­பிக்­கப்­ப­டும் என பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்­ளார் என்று அறி­ய­மு­டி­கின்­றது

Leave a comment