கொக்கரல்ல, இப்பாகமுவ குளத்தில் குளிக்க சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குளத்தில் நீராட சென்ற குழுவொன்றில் இருந்த ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமால் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாவத்தகம, இங்குருவத்த பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குழு ஒன்றுடன் யாத்திரை பயணம் ஒன்றை மேற்கொண்ட குறித்த நபர், குளத்தில் நீராட சென்ற போதே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
பிரதேசவாசிகளின் உதவியுடன் காணாமல் போனவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.

