கடவுச்சீட்டு வழங்குதலில் எவ்வித சிக்கலுமில்லை – வஜிர அபேவர்தன

12158 244

கடவுச்சீட்டு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் தேவையான கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடவுச்சீட்டு வழங்குதலில் இதுவரை எவ்விதமான சிக்கலும் ஏற்படவில்லை. அவ்வாறான தட்டுப்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான அடிப்படை பொருட்களை கொள்வனவு செய்து கடவுச்சீட்டுக்களை வழங்க முடியும்.

மேலும் ஒரு இலட்சத்துக்கு அதிகமான கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதி கோருவதற்கான அமைச்சரவை பத்திரமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சினூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a comment