நிர்மலா சீத்தாராமன் இலங்கை செல்கிறார்

326 0

nirmala_sitharaman__categorylistஇந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைக்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த மாதமே அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதாக இருந்தது.

எனினும் அரச வேலைப் பளு காரணமாக அவர் இந்த விஜயத்தை ஒத்திவைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.