வேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா?

4 0

கிளிநொச்சி – அம்பாள் குளம் பிரதேசத்தில் கடந்த 21 ஆம் திகதி (21-06-2018) சிறுத்தை புலி ஒன்று அப்பிரதேச மக்கள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் ஊடகங்களில் பரப்பப்பட்டன.

இச் சிறுத்தை அம்பாள் குளப் பகுதியில் 10 வரையிலான பிரதேச வாசிகளை கடித்ததாகவும் வன விலங்கு திணைக்கள உத்தியோகஸ்தர்களின் துரித செயற்பாடுகள் இன்மையாலும் பொதுமக்கள் சிலரால் சிறுத்தை அடித்துக் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

குடிமனைக்குள் புகுந்து மக்களை கடித்துக் குதறும் சிறுத்தையை கொன்றது சரியா? பிழையா? என வாதப்பிரதி வாதங்கள் எழுதுள்ள நிலையில் சிறுத்தை எவ்வாறு கிளிநொச்சிக்குள் வந்தது? இதன் பின்நோக்கிய புலனாய்வு என்ன ?

1) கிளிநொச்சியை அண்டிய காட்டுப் பகுதியில் சிறுத்தைகள் வாழ்வதற்கான சூழல் இல்லை. எனவே ,இராணுவத்தினர் இச் சிறுத்தையை வளர்த்துள்ளனர் என அறிய முடிகின்றது.

2 ) முகாமில் வளர்த்த அல்சேசன் நாய் தப்பியோடிவிட்டதென சிறுத்தை கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களின் முன்னர் அம்பாள்குளம் பகுதியில் இராணுவத்தினர் தேடுதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

3) அம்பாள்குளத்தில் சிறுத்தை அடையாளம் காணப்பட்ட ஆறு மணித்தியாலத்தில் அது பசு மற்றும் கன்றுகளின் அருகில் சாதாரணமாக படுத்திருந்திருக்கிறது. எனவே ,சிறுத்தைக்கு வேட்டையாட தெரியவில்லை. ஆகவே இது ஒரு வளப்புச்சிறுத்தை என்பது புலனாகின்றது.

4) சிறுத்தை மக்களை கொல்லும் அல்லது பாரிய காயத்தை ஏற்படுத்தும் ஆனால் குறித்த இந்த சிறுத்தை பூனையைப் போன்று விறாண்டி உள்ளது.

5) சிறுத்தை மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கு ஆனால் அம்பாள் குளத்தில் நவீன அயுதங்கள் அற்ற சில இளைஞர்களால் சிறுத்தையை எவ்வாறு கொல்ல முடிந்தது?

இவ்வாறான கேள்விக் கணைகள் எழுகின்றன…….!

அதே சமயம் சிறிலங்கா இராணுவ அரசியல் , புலனாய்வு நோக்கு நிலையிலிருந்து உருவாக்கப்பட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கட்டளைத்தளபதியாக இருந்த கேணல் ரவிப்பிரியவின் பிரியாவிடையின் போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் வேலை செய்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இச் சம்பவம் அதிர்ச்சி அளித்த போதிலும் எதிரியால் திட்டமிட்டு பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு ஊடுருவி தமக்கு சாதகமாக மடை மாற்றும் செயற்பாட்டை காணக்கூடியதாக உள்ளது.

இதே வேளை தமிழீழ தேசிய விலங்கு சிறுத்தையை வேகமாக ஓட முடியாத வகையில் ஊசி மருந்து ஏற்றப்பட்டு மக்கள் பகுதிக்குள் திட்டமிட்டு விடப்பட்டு சிங்கள ஏகாதி பத்தியத்தின் சில கைகூலிகள் அப்பாவி இளைஞர்களை சிறுத்தையை வேட்டை ஆடும் நோக்கோடு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன் உள் நோக்கத்தை அறியாத இளைஞர்கள் சிறுத்தை வேட்டையில் ஈடுபட்டதுடன் கைக்கூலிகளின் திட்டமிட்ட செயலால் “செல்பி“யும் (புகைப்படம்) எடுத்துக் கொண்டதுடன் சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டனர். இது உலக தமிழர் மனங்களின் வலியை ஏற்படுத்தியதுடனும் அவமானமாகவும் கருதப்பட்டது.

இன்றைய இளைஞர்களின் “செல்பி” மோகத்தை தமது தந்திரத்திற்கு பயன்படுத்திய கைக்கூலிகள். இன்று அந்த இஞைர்களை கைதியாக்கி விட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டுடன் வன்னியில் புலியின் பாய்ச்சலும் சிறுத்தையின் சீற்றமும் அமைதியானதால் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது.

Related Post

நடிகர் திலகம் சிவாஜியை மிஞ்சி விட்டார் நம்ம சிவாஜி!

Posted by - October 17, 2017 0
சிவாஜிலிங்கம் 2001 டிசம்பர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானதில் இருந்து இன்று வரை அவரது அரசியல்…

பட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை!

Posted by - December 20, 2018 0
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தப்படுவதைத்தான் அறிந்திருபீர்கள். ஆனால் மூன்று மாங்காய் வீழ்த்திய நரியின் தந்திரத்தை சிறிலங்காவின் நாடாளுமன்றில் காணக்கூடியதாக இருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக…

மாவீரர்களின் சரித்திரச் சாவினை ஒன்றாக நினைவு கூறுங்கள்!

Posted by - November 10, 2017 0
“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒர் உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு.…

அரச மரத்தின் கீழ் அரசியல் அமைப்பு!

Posted by - July 9, 2017 0
“ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது” என தேசியத் தலைவர் பிரபாகரன்  1980 ஆம்  ஆண்டு  ஓர் இந்திய ஊடகவியலாளரின்…

Leave a comment

Your email address will not be published.