உழுந்து இறக்குமதி வரி அதிகரிப்பு

426 0

மேலதிக உணவுப்பயிருக்குட்பட்ட முக்கிய உணவுப்பொருளாக கருதப்படும் உழுந்து இறக்குமதியை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பில் விசேட வர்த்தக பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கு சமீபத்தில் நடைபெற்ற வாழ்க்கைச்செலவுக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் வாழ்க்கைச்செலவுக்குழு அங்கத்தவரும் சிரேஷ்ட ஆய்வாளருமான துமிந்த பிரியதர்ஷன தெரிவிக்கையில்,

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உழுந்துக்காக இதுவரையில் இருந்துவந்த 100 ரூபா இறக்குமதி வரி 150 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக உள்ளுர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திக்கு ஆகக்கூடிய விலையை பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்வதே இதன் நோக்கம் ஆகும்.

இதேபோன்று தற்பொழுது உற்பத்தியாளர்கள் வைத்திருக்கும் உழுந்திற்கு ஆகக்கூடிய விலையை பெற்றுக்கொள்ள இதன் மூலம் முடியும்.

இதேபோன்று எதிர்வரும் போகத்தில் உழுந்து உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் இதன்மூலம் முடியும் என்று தெரிவித்தார்.

தமது உற்பத்திக்கு ஆகக்கூடிய விலை இந்த நடவடிக்கையின் மூலம் இடம்பெறும். இதேபோன்று உயர்தரமான ஆகக்கூடிய போசாக்கை கொண்ட உழுந்து உற்பத்திக்கான சூழ்நிலை இலங்கையில் உண்டு. உள்ளுர் தயாரிப்பாளருடன் இத்தொழிற்துறையினர் தேசிய உழுந்து தொழிற்துறைக்கு ஆர்வத்துடன் செயற்படுவதற்கும் இந்த வரி விதிப்பு பெரிதும் உதவும்.

முல்லைத்தீவு ,வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் உழுந்தை உற்பத்தி செய்வதற்குரிய பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொதுவாக வருடத்தில் 11 மெற்றிக்டொன் உழுந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. மொத்த உற்பத்தியில் 85 சதவீதமானவை பெரும்போகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது. 16ஆயிரம் ஹெக்ரர் நிலப்பரப்பில் இவ் உற்பத்தி இடம்பெறுகின்றது. மாதாந்தம் நாட்டில் உழுந்தின் தேவை 1500 மெற்றிக்டொன்களாகும்.

Leave a comment