நீண்ட தந்தங்களைகொண்ட யானை மாயம் – பாலித தெவர பெரும

260 0

கலாவெவ தேசிய பூங்காவில் அண்மையில் இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கயமடைந்தள்ள நீண்ட தந்தங்களைகொண்ட யானைக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், பாலித தெவர பெரும தற்போது அந்த யானை எங்கிருக்கின்றது என்பது தொடர்பான தகவல்கள் தன்னிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

“விரைவில் நீண்ட தந்தங்களைகொண்ட அந்த யானை எங்கிருக்கிறது என்பதை கலாவெவ தேசிய பூங்கா அதிகாரிகளிடம் கேட்டு தெரியப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலாவெவ தேசிய பூங்காவில் 4.5 அடி நீளமுள்ள தந்தங்களைக் கொண்ட யானை ஒன்று காணமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே வன ஜீவராசிகள் பிரதி அமைச்சர், பாலித தெவர பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“குறித்த யானை நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்திருந்ததைப் பார்த்த அப்பிரதேச மீனவர்கள், வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வைத்தியர் சந்தன ​என்பவர், அந்த யானைக்குத் தனது உயிரையும் ப​ணையம் வைத்து மருத்துவ உதவியளித்திருந்தார். நானும் இரண்டாவது தடவை அந்த யானைக்கு மருத்துவ உதவிகளை வழங்கு தனிப்பட்ட ரீதியில் வைத்தியர்களுடன் சென்றி​ருந்தேன்.

மருத்துவ உதவிகள் தேவைப்படும் யானைகளை நிலத்தில் சாய்த்து மருத்துவ உதவிகளை வழங்கும் முறைமை இலங்கையில் இல்லாதிருக்கின்றது.

இதனால் குறித்த யானைக்கு போதுமான மருத்துவ உதவிகள் வழங்க முடியாமலிருக்கின்றது.

யானைகள் நாட்டுத் துப்பாக்கிளை பயன்படுத்தியே அதிகம் கொலை செய்யப்படுகின்றன. இதற்கு எதிராக பொலிஸாரும் உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது உள்ளனர். பொலிஸார் நடவடிக்கை எடுத்தால், யானைகள் படுகொலை செய்யப்படுவதை முற்றாகத் தடுக்க முடியும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment