மாகாண சபைத் தேர்தலை பிற்போட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படாது என கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் படி தேர்தலை நடத்த தன்னுடைய கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

