அபரதுவை கினிகல சந்தியில் வாள் வீச்சில் இளைஞர் பலி

2 0

அபரதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகல சந்தியில் இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சு தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

அபரதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகல சந்தியில் வைத்து இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் மீது இன்னுமொரு மோட்டார் சைக்கிளிலும் முச்சக்கர வண்டியிலும் வந்த மூவர் வாள் வெட்டு மற்றும் கத்தி குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த குறித்த இளைஞர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 24 வயதுடைய அபரதுவையை சேர்ந்த லக்பிரிய அகலங்க லொகுபிடிய என்பவரே உயிரிழந்துள்ளதுடன்  இவரது சடலம் பிரதேத பரிசோதனைகளுக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விரோதம் காரணமாகவே குறித்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

சபை முதல்வராக தினேஷ் குணவர்தன

Posted by - November 3, 2018 0
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பாராளுமன்றத்தின் சபை முதல்வராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…

ராஜித சேனாரட்ன பொய் கூறுவதாக மஹிந்த கூறுகிறார்.

Posted by - October 21, 2016 0
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பொய் கூறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய…

துருக்கியின் உயர்மட்ட குழு இலங்கை செல்லவுள்ளது.

Posted by - October 29, 2016 0
துருக்கியின் மின்சாரம் மற்றும் மின்னணு நிறுவனங்களின் 16 உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கை செல்லவுள்ளது. இவர்கள் எதிர்வரும் நொவம்பர் மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் கொழும்பை வந்தடைவார்கள்…

ஐ.தே.க.யில் 20 பேர் கட்சி நடவடிக்கையில் வெறுப்படைந்துள்ளனர்- ஹிருனிகா

Posted by - May 3, 2018 0
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள 20 இற்கும் மேற்பட்ட பின்னாசன பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் மனக் கவலையுடன் உள்ளதாக ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா…

மஹிந்தவை பிரதமராக்கும் பயணம் ஆரம்பம்.!-பந்­துல

Posted by - January 1, 2018 0
சர்ச்­சைக்­கு­ரிய மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியே பொறுப்­புக்­கூற வேண்டும். மத்­திய வங்கி பிணை­முறி ஊழல்­வா­தி களுக்கு சட்­டத்தின் மூல­மாக அதி­யுச்ச தண்­டனை வழங்­கப்­பட…

Leave a comment

Your email address will not be published.