கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

302 0
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை சனிக்கிழமை (23) குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

நாளை சனிக்கிழமை (23) நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என்று அந்த சபை அறிவித்துள்ளது.

அத்தியவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ள உள்ள காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

Leave a comment