ஞானசார தேரருக்கு ராஜ யோகம், அவர் நாட்டின் ஜனாதிபதியாவார்- சிங்கள ராவய

250 0

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ராஜயோகம் உள்ளவர் எனவும் இதனை நிலச்சுவாந்தர்கள் நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும்  சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்தார்.

ஞானசார தேரர் எனும் பாத்திரத்துக்கு இந்நாட்டின் முதற் குடிமகனாக வருகின்ற யோகம் இருக்கின்றது. நூற்றுக்கு ஆயிரம் தடவைகள் நம்பிக்கையுடன் கூறுகின்றேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் எனவும் சுதத்த தேரர் குறிப்பிட்டார்.

இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

Leave a comment