இலங்கையில் யப்பான் நாட்டுப்பிரதிநிதி இன்று கிளாலிப்பகுதிக்கு சென்றுள்ளார்

286 0

இலங்கையில்  யப்பான் நாட்டுப்பிரதிநிதி இன்று கிளாலி ப்பகுதிக்கு சென்று சார்ப் மனிதநேயக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினால் வெடிபொருட்கள் அகற்றப்படும் பகுதிகளை நேரி்ல் பார்வையிட்டார்.

இன்று முகமாலை பகுதிக்கு சென்ற யப்பான் நாட்டு பிரதிநிதி முன்னதாக சார்ப் நிறுவன த்திற்கு சென்று; அங்கு திட்ட முகாமையாளர் ஒய்வுபெற்ற கப்டன் பிரபாத்தை சந்தித்தார். அதன் பின்னர் யப்பான் நாட்டுநிதி உதவியுடன் சார்ப் நிறுவன்தினால் வெடி பொருட்கள் அகற்றப்படும் கிளாலிப்பகுதி சென்றார்.

யப்பான் நாட்டு அரசாங்கத்தினதும் யப்பான் நாட்டு மக்களின் நிதிப்பங்களிப்புடனும் இலங்கையில் பல்வேறு அபிவிருத்திட்டங்கள் நடைபெற்றுவருகின்றது.இதி்ல் ஒன்றான வெடி அகற்றும் செய்யத்திட்டங்களுக்கும் யப்பான் நாட்டு அரசாங்கம் நிதிப்பங்களிப்பு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது சார்ப் நிறுவனத்தின் தலைமை அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a comment