பாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று பாதை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்
பாதுக்க, பொபே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதுக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

