பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஜூலை 05ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (21) பிறப்பித்துள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை வரையறுக்கப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் குழுமத்தின் தலைவரும் அர்ஜுன் அலோசியஸின் தந்தையுமான ஜெப்ரி அலோசியஸை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த வழக்குத் தவணையின் போது அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

