தபால் கட்டணம் உயர்வு

365 0

சாதாரண தபால் சேவை குறைந்த முத்திரைக் கட்டணமாக காணப்பட்ட 10 ரூபாவை 15 ரூபாவாக உயர்த்த தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 10 ரூபா முத்திரைக் கட்டணம் 15 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது. அத்துடன், பதிவுத் தபால் கட்டணம் சாதாரண விலையிலிருந்து 5 ரூபாவினாலும், தபால் அட்டையின் விலை 8 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.

Leave a comment