தேசிய ஹஜ் சட்டம் தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

237 0

ஹஜ் யாத்திரையுடன் தொடர்புடைய விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஹஜ் சட்டமொன்றை தயாரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்குவதற்காக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

ஹஜ் யாத்திரைக்கு செல்வதற்காக ஒரு வருடத்துக்கு 7,000 முதல் 10,000 பேர் வரை முஸ்லிம் மத மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கின்றனர். எனினும், இலங்கையர்களுக்கு ஒருவருடத்துக்கு 2,200 முதல் 3,400 பேர் வரையானவர்களுக்கே சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

இதனால் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயண முகவர்களைத் தெரிவு செய்வது மிகவும் சிரமமாக அமைந்துள்ளதால் தேசிய ஹஜ் சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment