நோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

249 0

நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் ஜென்ஸ் புரோலிக் ஹொல்ட் (Jens Frølich Holte) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் (20) இலங்கை வரவுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் இந்த விஜயத்தின்போது, சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தல், இருதரப்பு ஒத்துழைப்பு, சூழல் சவால்கள், மற்றும் கடல் சார் தொழிற்றுறைகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அவதானம் செலுத்துவார் என நோர்வே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தனது விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு, நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் மீள்குடியேற்ற பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் வாழ்வாதார செயற்றிட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயவுள்ளார்.

அதேவேளை, பளை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி பொதி செய்யும் நிலையத்தையும் இராஜாங்க அமைச்சர் திறந்துவைக்கவுள்ளார்.

Leave a comment