எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ மீண்டும் விளக்கமறியலில்

102 0

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 12 சந்தேகநபர்கள் சம்பந்தமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

அதன்படி அவர்களின் தொலைபேசி உரையாடல்கள் சம்பந்தமாக தகவல்களை வழங்க உத்தரவிடுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அந்த தகவல்களை வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.