கிராம மட்டத்தில் பாலங்கள் மற்றும் வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்காக பிரித்தானியாவின் உதவியை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரித்தானியாவின் வர்த்தக கொள்கைகள் சம்பந்தமான இராஜாங்க அமைச்சர் கிரெக் ஹேண்ட்ஸை சந்தித்த போது இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
பிரதமர் அண்மையில் லண்டனுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இதுகுறித்து பேசப்பட்டுள்ளது.
அதேவேளை கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் இணைப்பை ஏற்படுத்துவதற்காக பிரித்தானியாவின் விஷேட அறுவுறுத்தல்களை வழங்குவது சம்பந்தமாகவும் பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த விஜயத்தின் போது பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுடனும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

