நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

461 0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 5 பிரதிவாதிகள் மற்றும் கவர்ஸ் கோபரேட் சர்விஸஸ் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு எதிர்வரும் மாதம் 10 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதி நிதிமன்றில் இன்று முன்னிலையாகாத நிலையில் வழக்கு இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a comment