யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர், திடீரென தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார்.
இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 55 வயதான நபரொருவர் வீட்டில் வைத்து தனக்கு தீ மூட்டிக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை அயலவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

