மலையக சிறுமி கடத்தல் 8 பேருக்கும் பிணை

605 0

தலவாக்கலையில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால உட்பட 8 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஒவ்வொருத்தருக்கும் தலா 10 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தலவாக்கலையில் 5 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று ( 18.06.2018 ) நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அவர்களுக்கு பிணை வழங்கிய நீதிவான், வெளிநாடு செல்லவும் தடை விதித்தார்.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரையில் ஒத்தி வைத்தார்.

கடந்த 4 ஆம் திகதி சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மறுநாள் சிறுமியின் தாய் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment