ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு வீதியின் குயில்வத்தைபகுதியிலே இன்று காலை 7.15 மணியளவில் பாதையை விட்டு விலகி தேயிலை மலையில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டனிலுள்ளை ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற போது சீரற்ற காலநிலையினால் பாதையில் காணப்பட்ட வலுக்கல் தன்மையினால் வலுக்குச்சின்று விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேனில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையென்றும் வேன்சாரதி காயமடைந்து வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை அட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்

