இலங்கையில் இருந்து சீனாவிற்கு கடத்தப்பட்ட கடற் குதிரைகள்

287 0

சட்ட விரோதமான முறையில் கடற் குதிரைகளையும் சில மருத்துவ சாடிகளையும் சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற 3 பேரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் 35, 37 மற்றும் 40 வயதுடைய சீனர்கள் எனவும் இவர்கள் தங்கள் கை பையில் கடற் குதிரைகளையும் மருத்துவ சாடிகளையும் சீனாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இவர்கள் மூவரும் UL- 884 விமானத்தில் குவன்ஷோ நகருக்கு நேற்று (16) மாலை 5.35 மணியளவில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்ல இருந்துள்ளனர்.

Sent Claire தேயிலை வகையுடன் 350 கிராம் நிறையுடைய 265 உலர் கடற் குதிரைகளையும் இவர்கள் சீனாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 160,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6 முதல் 11 சென்டி மீட்டர் நீளமுள்ள கடற் குதிரைகள் சீனாவில் சுப் வகைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் இவற்றை பருகுவதால் சீனர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைப்பதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் குறித்த சீனர்கள் நீர்கொழும்பு பகுதியில் இருந்து இப் பொருட்களை வாங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.

Leave a comment